பாகிஸ்தானில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 200 ஆக உயர்வு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் அங்குள்ள செனாப், ஜீலம் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சியால் கோட், குஜ்ரன்வாலா மாவட்டங்களில் மட்டும் 556 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. மேலும் இந்த 2 மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தத்தளித்து வருகின்றனர்.பாகிஸ்தானில் மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் நேற்று முன்தினம் வரை 180 பேர் பலியாகி இருந்தனர். நேற்று மேலும் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்தது. 364 பேர் நாடு முழுவதும் காயமடைந்து உள்ளனர்.

வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய படைவீரர்களும், ராணுவத்தினரும் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பிரதமர் நவாஸ் ஷெரீப் விமானத்தில் பறந்து சென்று வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் படியும், நிவாரண நடவடிக்கைகளை விரைவாக முடுக்கி விடும்படியும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply