சகல தொகுதிகளுக்கும் தலா ரூ.2 கோடி ஒதுக்குவதற்கு அரசு தீர்மானம் : பசில் ராஜபக்ஷ
முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பசில் அறிவிப்பு கிராமிய பொருளாதாரத்தைப் பலப்படுத்தி “திவிநெகும” ஜீவனோபாய அபிவிருத்தி திட்டத்தை அமுல்படுத்துவதற்காக சகல தேர்தல் தொகுதிகளுக்கும் 20 மில்லியன் (02 கோடி ரூபா) என்ற அடிப்படையில் நிதி ஒதுக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் இதனை ஒதுக்க அமைச்சர் பசில் ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இந்த வேலைத் திட்டத்துக்காக பயனாளிகளைப் பயிற்றுவிக்கும் செயலமர்வின் ஆரம்ப வைபவம் வவுனியா கனகராயன்குளம் திவிநெகும பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
வவுனியா அரச அதிபர் பந்துல ஹரிச்சந்திர இதற்கு தலைமைவகித்தார்.
இந்தச் செயலமர்வின் மூலம் அடிப்படை தொழில்நுட்ப அறிவு, சுயதொழில் உற்பத்திகளை சந்தைப் படுத்தல், மனோபாவ மாற்றம், இன உறவை மேம்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென திவிநெகும மேலதிக பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் எஸ். கே. லியனகே தெரிவித்தார்.
557 கமநல சேவா நிலையங்களினதும், அரச நிறுவனங்களினதும் ஒத்துழை ப்புடன் இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது. 2011 மார்ச் 12 ஆம் திகதி திவிநெகும முதற்கட்டம் ஆரம்பமானது. நான்கு பிரிவுகளாக 50 இலட்சம் குடும்பங்கள் மத்தியில் இத்திட்டம் மேற் கொள்ளப்படுகிறது.
திவிநெகும தேசிய வேலைத் திட்டத்தில் 14,022 கிராமசேவா பிரிவுகளிலுள்ள 35, 440 கிராமங்கள் உட்படும் வண்ணம் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply