அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கோட்டாபய பேச்சு

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இலங்கையில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவன ங்களின் பிரதிநிதிகள் சிலருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது. சுமுகமான முறையில் நடைபெற்ற இச்சந்திப்பில் பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்து அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது. அரச சார்பற்ற நிறுவனங்கள் வரம்பு மீறிச் செயற்படக் கூடாது என அண்மையில் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்ததை அடுத்து ஒருவகை குழப்ப நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் அரசாங்கத்திற்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அரச சார்பற்ற நிறுவனங்களை அரசாங்கம் கண்காணித்தல், காணாமல் போனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகள், அரசாங்கத்துடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பேச விரும்பாமைக்கான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது ஆரயப்பட்டன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply