பாக்தாத்தில் கார் குண்டு தாக்குதல்களுக்கு 44 பேர் பலி
ஈராக் தலைநகர் பாக்தாத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த கார் குண்டு தாகுதல்கள் மற்றும் வெடிகுண்டு வீச்சு போன்ற வன்முறை சம்பவங்களுக்கு 44 பேர் பலியாகியுள்ளனர். புதிய பாக்தாத் நகரில் உள்ள போக்குவரத்து போலீசாரின் சோதனைச்சாவடி ஒன்றின் மீது குண்டுகள் நிரப்பிய வாகனத்தை மோதச் செய்ததில் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த 5 போலீசார் பலியாகினர். இதேபோல், தெற்கு பாக்தாத்தில் உள்ள புறக்காவல் நிலையம் மீது தற்கொலைப்படை நடத்திய கார் குண்டு தாக்குதலில் 6 போலீசார் பலியாகினர்.
வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை விற்பனை செய்யும் மார்க்கெட் பகுதியில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதல்களுக்கு 19 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
மற்றொரு மார்க்கெட் பகுதியில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
ஆக, நேற்று ஒரே நாளில் பாக்தாத் நகரில் மட்டும் வன்முறை தாக்குதல்களுக்கு 44 பேர் பலியாகியும், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply