உத்தர பிரதேச மாநில மொராதாபாத் மாவட்டத்தில் ஒரு வயது குழந்தைக்கு கோர்ட் சம்மன்

உத்தர பிரதேச மாநில மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள தகுர்த்வாரா பகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி வாக்களர்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடக்கூடும் என்று 28 வயதான யாசீன் மற்றும் அவரது ஒரு வயது குழந்தையான நசீம் மீது அம்மாவட்ட காவல்துறையினர் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதுகுறித்த கோர்ட் சம்மன் ஒன்று அவர்களுக்கு கடந்த சனிக்கிழமை அன்று வழங்கப்பட்டபோது அந்தக் குடும்பம் அதிர்ச்சிக்குள்ளாகியது. இதற்காக இந்த இருவரும் ஒரு பாதுகாப்பு பத்திரத்தை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும், இல்லையெனில் இவர்கள் கைது செய்யப்படலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கைது பயத்தில் ரூ. 50,000 பத்திரம் பெற தனது மகனையும் அழைத்துக்கொண்டு சப் டிவிஷனல் நீதிபதியை யாசீன் அணுகியபோது அவருக்கு பத்திரம் பெற ஒப்புக்கொண்ட நீதிபதி அவரது மகனுக்கு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். ஒரு வயது குழந்தைக்கான இந்த உத்தரவு அபத்தமானது என்று கூறிய நீதிபதி இதற்குக் காரணமான காவல்துறை அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

சில காவலர்களின் அச்சுறுத்தல் தேவையைத் தான் மறுத்ததால் தன்மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று யாசீன் குறிப்பிட்டார். குழந்தையின் மீது வழக்கு பதிவு செய்துள்ளதற்காக தகுர்த்வாரா பகுதி பொறுப்பு அதிகாரி மீதும், காவல் நிலையத்தினர் மீதும் அலுவலக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மொராதாபாத் காவல்துறைத் தலைவர் குலாப் சிங் கூறியுள்ளார்.

ஆனால் இடைத்தேர்தலை முன்னிட்டு அங்கு நடத்தை தார்மீகக் குறியீடுகள் செயல்படுத்தப்பட்டுள்ளதால் வழக்கு பதிவு செய்த காவலர் மீது நடவடிக்கை எடுக்கமுடியாது என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply