டெல்லி மெட்ரோ ரெயில் திட்ட ஒப்பந்தம் பெற ரூ.27 கோடி லஞ்சம் கொடுத்த பிரான்ஸ் கம்பெனி
பிரான்சை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அல்ஸ்டோம் என்ற கம்பெனிக்கு பிரிட்டனில் துணைக்கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனி டெல்லி மெட்ரோ ரெயில் திட்டப் பணிக்கான ஒப்பந்தத்தை பெறுவதற்காக இரண்டு கம்பெனிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த கம்பெனி கடந்த 2000-ம் ஆண்டு ஜூன் முதல் 2006 நவம்பர் மாதம் வரை டெல்லி மெட்ரோ ரெயில் கட்டுமானம் மற்றும் துனிசியா, போலந்து நாட்டில் உள்கட்டமைப்பு ஒப்பந்தத்தைப் பெற சுமார் 8.5 மில்லியன் டாலர் அளவில் லஞ்சம் கொடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அல்ஸ்டோம் நெட்வொர்க் யுகே லிமிடெட் என்ற இந்த நிறுவனம் மீது 3 பிரிவுகளில் ஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த ஊழல்களில் பெரும்பாலானவை இந்தியா, போலந்து மற்றும் துனிசியா ஆகிய நாடுகளில் 2000 முதல் 2006 வரை போக்குவரத்து திட்டத்தில் நடைபெற்றதாகும்.
இந்த வழக்கின் முதல் விசாரணை நேற்று முன்தினம் வெஸ்ட்மின்ஸ்டெர் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நடந்தது. அடுத்த விசாரணை அக்டோபர் 6-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நிதி கண்காணிப்புத் துறை சார்பாக கடந்த ஜூலை மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது வழக்கு நடைபெற்று வருவதால் மேலும் இதுகுறித்து தகவல் அளிக்க முடியாது என்று இங்கிலாந்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டெல்லி மெட்ரோ ரெயில் ஒப்பந்தத்தை பெற ஆல்ஸ்டோம் நிறுவனம், இந்தோ ஐரோப்பியன் வென்ஞசர்சுக்கு 2 கோடியும், குளோபல் கிங் டெக்னாலாஜிக்கு 24.5 கோடி ரூபாயும் கொடுத்ததாக கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply