ஓசோன் ஓட்டை சுருங்க ஆரம்பம் பூமிக்கு பாதுகாப்பு

புற்றுநோய்க்கு காரணமான புற ஊதாக்கதிர்களிலிருந்து நாம் வாழும் பூமியை பாதுகாக்கும் ஓசோன் படலம் மீட்சி பெற்று வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஐ.நா. ஆய்வொன்று குறிப்பிடுகிறது. ஆண்டார்டிகாவில் மேலால் உள்ள ஓசோன் ஓட்டை ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து பெரிதாகி வருவது நின்றுவிட்டது. ஒரு தசாப்தத்திற்கு பின்னரே இந்த ஓட்டை சுருங்க ஆரம்பித்திருப்பதாக அந்த ஆய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது. ஓசோனை பாதிக்கும் சி.எப்.சி. வாயுக்களை படிப்படியாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்ததே ஓசோன் படல மீட்சிக்கு முழுமையான காரணம் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உலக வாநிலை ஆராய்ச்சி மையம் (டபிள்யு.எம்.ஓ) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் (யு.என்.ஈ.பி) வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் இந்த விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஓசோன் படலம் குறித்த சர்வதேச நடவடிக்கை பாரியதொரு சுற்றுச் சூழல் வெற்றியாகும்.

இதன் வெற்றி அபாயம் கொண்ட காலநிலை மாற்றத்திற்கு ஒன்றிணைந்து நடவடிக்கை எடுப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதாக டபிள்யூ.எம்.ஓ.வின் பொதுச் செயலாளர் மைக்கல் ஜர்ரோட் குறிப்பிட்டுள்ளார். எனினும் ஓசோன் ஓட்டை தானாக சீரடையும் என்பது குறித்து விஞ்ஞானிகளால் இன்னும் முழுமையாக உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் ஓசோன் படலம் மேசமாடைவது நின்றிருப்பதாக கடந்த கால ஆய்வுகள் கணித்திருந்தன. ஒட்டுமொத்த ஓசோன் படலத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப் பதற்கான அறிகுறி முதல் முறை இந்த ஆய்வு மூலம் தெயி வருவந்துள்ளது. இதன் மூலம் முழு ஓசோன் படலமும் மீட்சி பெற ஆரம்பித்திருக்கிறது” என்று டபிள்யு. எம்.ஓ.வின் சிரேஷ்ட விஞ்ஞான அதிகாரி கெயிர் பரதன் குறிப்பிட்டுள்ளார்.

ஓசோன் படலத்தை சிதைக்கும் இரசாயன பொருட்களை தடைசெய்ய அல்லது படிப்படியாக குறைக்க 1987 மொன்ட்ரியல் நெறிமுறையில் உடன்பாடு எட்டப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply