இந்தியாவில் சிகப்பு விளக்கு எரியும்போது வாகனங்களை நிறுத்தாதவர்களுக்கு ரூ.5000 – செல்போன் பேசுபவர்களுக்கு ரூ.4000 அபராதம்
மத்திய அரசு சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதாவில் புதிய சட்டதிட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி இனி சாலை விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு வழிவகை செய்துள்ளது. சாலையில் சென்று கொண்டிருக்கும் போது சிக்னலில் சிகப்பு விளக்கு விழுந்தும் போக்குவரத்து விதிகளை மீறிச் சென்றால், அவர்களுக்கு ரூ. 5000 அபராதமாக விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது போன்ற அத்துமீறல் தொடருமானால் அபராத தொகை 10000 முதல் 15000 வரை அதிகரிப்படுவதுடன், வாகன ஓட்டுநர் உரிமத்தையே (டிரைவிங் லைசென்ஸ்) ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வாகனத்தை அதிவேகமாக ஓட்டிவந்து குழந்தை மீது மோதி, அது மரணமடைந்தால் அதன் டிரைவருக்கு மூன்று லட்ச ரூபாய் அபராதமும், ஏழு வருட சிறை தண்டனையும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தங்கள் வாகனங்களில் குழந்தைகளை வைத்துகொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்பவர்களின் லைசென்ஸை ரத்து செய்யவும், ரூ.15000 அபராதம் விதிக்கவும் முடிவாகியுள்ளது. அது போல் ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.2500-ம், வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசினால் ரூ. 4000-முதல் ரூ.10000-ம் வரை அபராதம் செலுத்தவேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடித்து அபராதம் மற்றும் சிறை தண்டனையை தவிர்க்கவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply