முந்தைய அரசுகளைப் போல் அல்ல! மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : தமிழிசை செளந்தரராஜன்

முந்தைய அரசுகள் போல் இல்லாமல் விரைவில் தமிழக மீனவர் பிரச்சினையை பாஜக அரசு தீர்த்து வைக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி மேயர் இடைத்தேர்தல் செப்.18-ம் திகதி நடைபெறுகிறது. பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஆர்.நந்தகுமாரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக, தமிழிசை செளந்தரராஜன் சனிக்கிழமை கோவை வந்தார்.  அவர் கோவை சித்தாபுதூரில் உள்ள கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த தமிழிசை கூறியதாவது,

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் பலமுறை பேசியிருக்கிறோம்.

முந்தைய அரசுகள் போல் இல்லாமல் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக தமிழக மீனவர் பிரச்சினையை பாஜக அரசு தீர்த்து வைக்கும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply