பிணைக்கைதிகள் இருப்பிடம் தெரியாததால் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது: பிரிட்டன் அறிவிப்பு

ஈராக்கில் சதாம் உசேன் ஆதரவு படையான ஐ.எஸ்.தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்தி அந்நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி, சிரியாவில் கைப்பற்றப்பட்ட பகுதியையும் ஒருங்கிணைத்து “இஸ்லாமிய நாடு” என்ற பெயரில் தனி அரசை நடத்தி வருகிறது. இவர்களால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை குர்திஷ் படையினர் மீட்க உதவும் வகையில் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்க போர் விமானங்களின் தாக்குதல்களால் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த பல்வேறு நகரங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் அமெரிக்காவை சேர்ந்த பத்திரிக்கையாளர்களான ஸ்டீவன் ஸ்காட்லாப் மற்றும் ஜேம்ஸ் போலே ஆகியோர் பிணைக்கதிகளாக பிடித்து அவர்களை தலை துண்டித்து கொன்றனர்.

அப்போது அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்துள்ளதால் தங்களிடம் பிணைக்கைதியாக உள்ள பிரிட்டன் நாட்டை சேர்ந்த டேவிட் ஹெய்ன்சை தலை துண்டித்து கொல்லப்பபோவதாக தீவிரவாதிகள் தெரிவித்தனர். அதன்படி நேற்று முன்தினம் இன்று ஹெயின்ஸ் தலை துண்டித்து கொல்லப்பட்டார். தீவிரவாதிகள் தங்கள் பிடியில் உள்ள பிரிட்டனின் ஆலன் ஹென்னிங்கை அடுத்து கொல்லப்போவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிணைக்கைதிகளை மறைத்து வைத்திருக்கும் இடத்தின் மீது தாக்குதல் நடத்தி அவர்களை விடுவிக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பிரிட்டன் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள் பிணைக்கைதிகளை அடைத்து வைத்திருக்கும் இடம் தெரியாததால் மீட்பு பணிகளில் இறங்க முடியாது என்றும் பிரிட்டன் கூறியுள்ளது. பிரிட்டன் நாட்டின் எலைட் பிரிவான சிறப்பு விமான சேவையை பயன்படுத்தி ஏன் ஹென்னிங்கை மீட்கவில்லை என்று கேள்வியெழுப்பியபோது, அந்நாட்டு வெளியுறவு துறை செயலர் பிலிப் ஹாம்மாண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஹென்னிங்கின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபடும் என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply