மலேசியா புலிகளின் புகலிடமாக மாறுமா?

புலிகளின் சர்வதேச முகவர் குமாரன் பத்மநாதன் மலேசியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக நம்பதகுந்த தரப்பில் இருந்து தமக்கு தகவல்கள் கிடைத்திருப்பதாக இலங்கை நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மலேசியா புலிகளின் புகலிடமாக மாறுமா என்ற தலைப்பில் அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. குமாரன் பத்மநாதன் என்ற கே.பி அண்மையில் தாய்லாந்தில் கைதுசெய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. பின்னர் இது குறித்து இலங்கை அரசாங்கம் தாய்லாந்து அரசாங்கத்திடம் கேட்டபோது தாய்லாந்து அரசாங்கம் அந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை.

கே.பி உள்ளிட்ட புலிகளின் முக்கிஸ்தர்கள் சிலர் மலேசியாவில் இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை கொலை செய்வதற்காக மலேசியாவில் இருந்து இலங்கை சென்ற இரண்டு பேர் ஒரு வாரத்திற்கு முன்னர் காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை அண்மைகாலமாக இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மலேசியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். புலிகள் தொடர்பில் மலேசிய அரசாங்கம் கூடிய அக்கறை செலுத்தாத காரணத்தினால் மலேசியாவில் புலிகளின் செயற்பாட்டாளர்கள் தடையின்றி தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது என அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply