வேறு எந்த குழுக்களும் ஆயுதங்களுடன் இருப்பின் அவர்களும் ஆயுதங்களை கைவிடவேண்டும் : ஆனந்தசங்கரி

பல ஆண்டுகள் தம்வசம் இருந்த ஆயுதங்களை கைவிடுவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எடுத்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது.

இத்தகைய ஓர் முடிவை எடுக்க வழி வகுத்த கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கே இப்பெருமை உரியதாகும். இம்முடிவு கிழக்கு மாகாண மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை நிச்சயமாகக் கொடுக்கும.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கையளிப்புத் தொடர்பாக தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்த சங்கரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளர்.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

உண்மையில் ரி.எம்.வி.பி. யினருக்கு விடுதலைப் புலிகளால் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தமையால் அன்று அவர்கள் தம் ஆயுதங்களை கைவிட்டிருக்க முடியாது. எனினும் அவர்கள் ஆயுதங்களு;டன் நடமாடியது அவர்களுடன் இணைந்து செயற்பட்ட மக்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கவில்லை என்பதும் உண்மையே. இப்போதுதான் கிழக்கிழங்கையில் ஜனநாயகம் உதித்துள்ளது.

இக்கட்சி தனது பெயரில் உள்ள புலிகள் என்ற சொல்லை கைவிடுவதோடு தம்மிடம் சிறுவர்கள் போராளியாக யாரேனும் இருப்பின் அவர்களையும் உடன் விடுவிக்க வேண்டும். அவர்கள் இனி மக்களுடன் கலந்துரையாடி மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்சத்தை போக்கி சகோதரத்துவத்தையும் வளர்க்கவேண்டும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சகல மக்களும் சகல உரிமைகளையும் அனுபவிக்கின்றார்களா என்பதை கவனிப்பதோடு, வேறு எவரேனும் அவர்களின் உரிமைகளில் தலையிடாது பார்த்துக்கொள்ளவும் வேண்டும்.

வேறு எந்த குழுக்களும் ஆயுதங்களுடன் இருப்பின் அவர்களை வற்புறுத்தி ஆயுதங்களை கைவிடவைப்பதோடு, தேவை ஏற்படின் அவர்கள் அரச பாதுகாப்பை நாடவைக்கவும் வேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply