முஸ்லிம்களுக்கு எதிரான சவால்களை முறியடிக்க தியாக சிந்தனை அவசியம் : அலவி மெளலானா
புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் மக்களுடன் இணைந்து வாழ்த்துச் செய்தியினை பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். சரித்திர பிரசித்தம் வாய்ந்த நபி இப்றாஹீம் (அலை) அவர்களது தியாகத்தினை எமக்கெல்லாம் எடுத்தியம்பும் புனித நாளாக ஹஜ்ஜுப் பெருநாள் தினம் திகழ்வதாக மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா தெரிவித்தார். இன்று இலங்கை வாழ் முஸ்லிம்களும் உலகளாவிய ரீதியில் முஸ்லிம் நாடுகளும் ஏகாதிபத்திய நாடுகளின் சூழ்ச்சிக்கு இலக்காகி பாரிய இன்னல்களை அனுபவித்து துன்பப்படுகின்றனர்.
இவ் வேலையில் முஸ்லிம்களாகிய நாம் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. நாம் எமக்குள் பிளவுகளை ஏற்படுத்திக் கொள்ளாது ஒற்றுமையாக பொறுமையாக தியாக சிந்தனையுடன் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.
உலக, இலங்கை வாழ் மக்கள் அனைவக்கும் சாந்தியும் சமாதானத் தையும் நிம்மதியையும் வழங்க வேண் டும் என புனித ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தில் சகல வல்லமையும் படைத்த அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply