ஜெயலலிதா ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது: ஜெத்மலானி ஆஜராகி வாதாடி வருகிறார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமின் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று இம்மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சந்திரசேகரா ஜாமின் மனு மீதான விசாரணையை நடத்தி வருகிறார். அப்போது ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதாடி வருகிறார். அரசு தரப்பில் பவானி சிங் ஆஜராகி வாதாடி வருகிறார்.

இதனிடையே கர்நாடகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் அடுத்தகட்ட விசாரணை அங்கேயே நடக்க வேண்டும் எனவும் அம்மாநில உயர்நீதிமன்ற பதிவாளரிடம் கர்நாடக சட்ட பாதுகாப்பு கமிட்டி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply