இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 18 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதில் இருந்து இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட அத்துமீறிய பெரிய தாக்குதல்களை பாகிஸ்தான் படைகள் நடத்தியுள்ளன. பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என்று இந்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இதைப்போன்ற அத்துமீறல்களின் மூலம் இந்தியாவை மீண்டும் பேச்சுவார்த்தையின் பக்கம் திசைதிருப்பும் வகையில், சமீபத்திய தாக்குதல்களை பாகிஸ்தான் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். இதுநாள் வரை இந்திய நிலைகளின் மீது திடீர் தாக்குதல் நடத்தி பாதுகாப்பு படையினரை நிலைகுலையச் செய்துவரும் பாகிஸ்தான் படைகள், தற்போது எல்லைப்பகுதியில் குடியிருக்கும் அப்பாவி பொதுமக்களிடமும் கைவரிசையை காட்ட தொடங்கியுள்ளன.

பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ’மோர்ட்டார்’ ரக குண்டுகளை ஏவி பாகிஸ்தான் நடத்தி வரும் கொலை வெறி தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

பாகிஸ்தானின் இந்த எல்லைமீறிய அத்துமீறலுக்கு பின்னணியில் இன்னொரு காரணமும் இருப்பதாக இந்திய ராணுவ உளவு வட்டாரங்கள் கருதுகின்றன.

பாகிஸ்தான் ராணுவத்தால் இரவு நேரங்களில் அவ்வப்போது நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்களில் இந்திய வீரர்கள் நிலைகுலையும் வேளையில், எல்லைக்கோட்டுப் பகுதியோரம் உள்ள பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதியில் தயார் நிலையில் இருக்கும் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்து, அவர்களின் மூலமாக இந்திய மண்ணில் மீண்டும் தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விட பாகிஸ்தான் தீட்டிவரும் சதி திட்டம் தற்போது அம்பலமாகியுள்ளது.

இதற்காக, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீர் பகுதியில் 20 தீவிரவாத பயிற்சி முகாம்கள் இயங்கி வருவதாகவும், இங்கு பயிற்சி பெற்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், எந்த நேரத்திலும் ஆயுதங்களுடன் இந்தியாவுக்குள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாகவும், இந்த முயற்சியை முறியடிக்க இந்தியப் படைகள் விழிப்புணர்வுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஷ்மீர் பகுதியில் அடர்ந்த பனிக்காலம் தொடங்குவதற்குள் இந்த தீவிரவாதிகளை எல்லாம் எப்படியாவது இந்தியப் பகுதிக்குள் ஊடுருவச் செய்துவிட வேண்டும் என்று பாகிஸ்தான் துடியாய் துடிக்கின்றது.

இந்நிலையில், எல்லைகோட்டுப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் நேற்று ஊடுருவ முயன்ற 18 தீவிரவாதிகளை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply