வவுனியா பொலிஸார் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு

வவுனியாவில் ஆயுதக்குழுக்களினால் வரி விதிப்பு, ஆட்கடத்தல், கப்பம் கோரல், ஆயுத மிரட்டல் மற்றும் கொலைகள் தொடர்பான சம்பவங்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால் அவை தொடர்பான புகார்களை வவுனியா பொலிஸ் நிலையத்தில் மக்கள் நேரடியாக சென்று முறையிடலாம் என கடந்த சனிக்கிழமை (மார். 7) வவுனியா பகுதி எங்கும் பொலிஸார் வாகனத்தின் பொருத்தப்பட்ட ஒலி பெருக்கிகள் மூலம் பகீரங்க அறிவிப்பு செய்தனர். வவுனியா பொலிசார் மக்கள் தொலை பேசியூடாக ஆயுதக்குழுக்களின் அடாவடித்தனங்களை முறையீடு செய்யவும் வழிவகை செய்துள்ளனர்.

கடந்த மார்ச் 3ம் திகதி வவுனியா வங்கி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு ஊழியர் ஆகிய இருவரையும் கடத்தி முப்பது கோடி ரூபாய் கப்பம் கோரியதாகவும் அதற்கு வங்கி நிர்வாகம் மறுப்புத் தெரிவிக்கவே உறவினர்களிடம் ஒன்பதரை இலட்சம் பணம் கப்பமாக கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.  இதனையடுத்து கப்பப் பணத்தினை வழங்குவதற்கு உறவினர்கள் சென்றதாகவும் கப்பம் பெற வந்த நபர்களை சிவில் உடையில் பதுங்கியிருந்த வவுனியா பொலிஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தினை தொடர்ந்து வவுனியாவில் மக்கள் மத்தியில் பதற்ற நிலை காணப்படுப்படுவதாக தெரிகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply