வடக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாண பணிகள் ஆரம்பம் ஜனாதிபதியினால் அடுத்தமாதம் அங்குரார்ப்பணம்
வடக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் அடுத்த மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்படவிருக்கிறது. வரலாற்றில் அதிகூடிய முதலீடான 300 முதல் 350 பில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்படும் வடக்கு அதிவேக நெடுஞ்சாலையின் முதலாம் கட்டம் 4 வருடங்களில் நிறைவு செய்யப்பட இருப்பதாக நெடுஞ்சாலை திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்தார். இதனூடாக கண்டிக்கும், தம்புள்ளைக்கும் 1 1/4 மணி நேரத்தில் பயணிக்க முடியும் என்று தெரிவித்த அமைச்சர் அடுத்து யாழ்ப்பாணத்துக்கும் திருகோணமலைக்கும் நெடுஞ்சாலையை விஸ்தரிக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.
வடக்கு அதிவேக நெடுஞ்சாலை திட்டம் குறித்து விளக்கமளிக்கும் ஊடக மாநாடு நேற்று நெடுஞ்சாலை அமைச்சில் நடைபெற்றது. இதில் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் பிரேமசிறி, திட்டப் பணிப்பாளர் எஸ். பி. எஸ். வீரகோன் ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர். மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
பல வருட திட்டத்தின் பின்னர் வடக்கு அதிவேக நெடுஞ்சாலை பணி ஆரம்பிக்கப்பட இருக்கிறது. ஆரம்பத்தில் கொழும்பு – கண்டி நெடுஞ்சாலையே நிர்மாணிக்கப்பட இருந்தது. ஜனாதிபதியின் ஆலோசனைப்படி வடக்கிற்கும் நெடுஞ்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி வெளிச் சுற்றுவட்ட வீதியில் எடேரமுல்லையில் இருந்து – தம்புள்ள வரை முதற் கட்டத்தின் கீழ் நெடுஞ் சாலை நிர்மாணிக்கப்படும். பொது ஹரையில் இருந்து ரம்புக்கன, கலகெதர. ஊடாக கன்னொருவ வரை கண்டி வரையான நெடுஞ்சாலை அமைக் கப்படும். மொத்தமாக 154 கிலோ மீற்றர் தூர நெடுஞ்சாலை உருவாக்கப்பட உள்ளதோடு காணி சுவீகரிப்பு பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. தேர்தல் நோக்கத்தில் இந்தக் காலத்தில் நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப் படவில் லை இது ஏற்கனவே திட்டமிடப் பட்டதாகும் என்றார்.
இந்த திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களுக்கே வழங்கப்படுவதோடு ஒரு பகுதி சீன கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ளது.முதலில் 4 வழிப்பாதையாக அமைக்கப் பட்டு அடுத்து ஆறு வழிப்பாதையாக அதிகரிக்கப்படும். தம்புள்ள வரையான பாதை அதிக வாகன நெரிசல் கொண்டது. அங்கு செல்ல கூடுதல் நேரம் பிடிக்கிறது. நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பின்னர் இது ஒன்றேகால் மணித்தியாலயமாக குறையும்.
இந்தத் திட்டத்தினூடாக குருணாகல், கேகாலை, மாத்தளை, கண்டி, அநுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் 3/4 பகுதி மக்கள் பயனடைய உள்ளனர். மக்களின் தேவை உணர்ந்தே இந்த திடம் ஆரம்பிக் கப்பட்டது.
எதிர்கால சனத்தொகை அதிகரிப்பு, வாகன அதிகரிப்பு என்பவற்றுக்கு முகம் கொடுக்க இந்த திட்டங்கள் வாய்ப்பாக அமையும். ஏனைய நெடுஞ்சாலைகள் போலன்றி மக்களுக்கு குறைந்த தூரத்தில் இலகுவாக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வகையில் வடக்கு நெடுஞ்சாலை உருவாக்கப்படும் என்றார்.
இந்தத் திட்டத்திற்காக 6819 ஏக்கர் காணி சுவீகரிக்கப்படும். 1243 வீடுகள் பாதியளவு அல்லது முழுமையாக அகற்றப்பட உள்ளன. இந்த திட்டத்திற்கு உள்நாட்டு நிதியும் வெளிநாட்டு கடனும் பயன்படுத்தப்படும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply