ஈராக்கில் கார் குண்டு வெடிப்பு: முன்னாள் மந்திரி உள்பட 28 பேர் பலி
ஈராக்கில் மேற்கு அன்பார் மாகாணத்தை பிடிப்பதற்காக ஐ.எஸ். தீவிரவாதிகள், அரசு படைகளுடன் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இதனால் அங்கிருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தலைநகர் பாக்தாத் அருகில் உள்ள இமாம் காதிம் பகுதியில் நேற்றுமுன்தினம் பயங்கர கார் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் முன்னாள் உள்துறை துணை மந்திரியும், ஷியா பத்ர் அரசியல் கட்சியின் எம்.பி.யுமான அகமது அல் ஹபாஜி மற்றும் 5 போலீஸ் அதிகாரிகள் உள்பட 25 பேர் கொல்லப்பட்டனர்.
2–வது தாக்குதல் வடக்கு பாக்தாத்தில் உள்ள அல் குகிரா மாவட்டத்தில் அதிக மக்கள் நெருக்கடி மிகுந்த சாலையோரம் நடந்தது. இதில் 3 பேர் பலியானார்கள்.
இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈராக்கில் ஷியா பிரிவினர் அதிகம் வாழும் பகுதியில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதல்களில் 77 பேர் கொல்லப்பட்டது நினைவு கூரத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply