எல்லையில் தாக்குதல் வேண்டாம்: இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா வேண்டுகோள்

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பாகிஸ்தான் கடந்த 1–ந் தேதி முதல், போர் நிறுத்த ஒப்பந்தம் மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தக்க பதிலடி தந்து வருகிறது. இதனால் எல்லையில் பதற்றம் தொடர்கிறது. இந்த நிலையில் பீஜிங்கில் நேற்று சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹாங் லீயிடம், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லையில் நடந்து வரும் தாக்குதல்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘‘ இதை சீனா மிகவும் உன்னிப்புடன் கவனித்து வருகிறது. அண்டை நாட்டினர் என்பதோடு மட்டுமல்லாமல், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் நட்பு நாடு என்ற வகையில் சொல்கிறோம். இரு தரப்பும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். தாக்குதல்களை நிறுத்த வேண்டும். பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். தெற்காசியாவில் அமைதி, ஸ்திரத்தன்மை, முன்னேற்றம் ஏற்பட இரு நாடுகளும் கூட்டாக பணியாற்ற வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply