அரசுக்கு இ.தொ.கா நிபந்தனையற்ற ஆதரவு எதிர்வரும் தேர்தல்களிலும் ஆதரவு வழங்க முடிவு
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கப் போவதாக இ. தொ. கா. பொதுச் செயலாளர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் வைத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையா டியுள்ளனர். இதன்போதே அமைச்சரும் இ. தொ. கா. பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் இதனைத் தெரிவித்துள்ளார்.
மலையக பெருந்தோட்ட மக்களின் நலன்புரி துறையிலும் பெருந்தோட்டத் துறை பிரதேச உட்கட்டமைப்பு அபிவிருத்தியிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத் தியுள்ளதாக இதன்போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்து ள்ளார்.
இதற்கிணங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ளதுடன் எதிர்வரும் அனைத்துத் தேர்தல்களிலும் பூரண ஒத்துழைப்புடன் செயற்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், மாகாண அமைச்சர் செந்தில் தொண்ட மான் உட்பட இ. தொ. கா. பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இச்சந்திப்பு தொடர்பில் இ. தொ. கா. வின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவிக்கையில்:
2005ம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னரே மலையகப் பெருந்தோட்டத்துறைப் பகுதிகளுக்கு அபிவிருத்தித் திட்டங்கள் வந்தன. அதனைத் தொடர்ந்து மலையகப் பிரதேசங்களில் வீதிகள், குடி நீர்த் திட்டங்கள், மின்சார வசதிகள் உட்பட பல்வேறு செயற்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்கள் மென்மேலும் விரிவடையவும் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மேலும் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளவும் நாம் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும்.
அந்த வகையில் இ.தொ. கா. வின் முழுமையான ஆதரவை நாம் தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு வழங்குவோம். குறிப்பாக மலையக வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 50,000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இது விடயத்தில் ஜனாதிபதி அவர்கள் உரிய பணிப் புரைகளை வழங்கியுள்ளார். முதற்கட்டமாக களுத்துறை பகுதியில் அண்மையில் வீடமைப்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீட்டுத் திட்டங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. அது தொடர்பில் இ. தொ. கா. விற்கு முழுமையான நம்பிக்கையுண்டு என்றும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply