பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயம் வத்திக்கானிலிருந்து மற்றொரு குழு இலங்கைக்கு வருவதற்கு ஏற்பாடு

பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் ஆண்டகையின் இலங்கை விஜயம் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக வத்திக்கான் தூதுக்குழுவொன்று இலங்கை வரவுள்ளதாக கொழும்பு உயர் மறை மாவட்டம் தெரிவித்தது. பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயம் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை கொழும்பு உயர் மறை மாவட்டம் மேற்கொண்டு வருகின்றது. அதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதற்காக வத்திக்கான திருப்பீடத்திலிருந்து தூதுக் குழுவொன்று அடுத்த மாதத்தில் இலங்கை வரவுள்ளது. இதுபோன்ற குழுவொன்று இதற்கு முன்னரும் இலங்கைக்கு வருகை தந்து உயர் மறை மாவட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளதுடன் இரண்டாம் கட்டமாகவே மேற்படி குழு இலங்கை வரவுள்ளது.

இலங்கையில் ஜனவரியில் நடைபெறுவதாகக் கூறப்படும் தேர்தலையும் பரிசுத்த பாப்பரசரின் வருகையையும் தொடர்புபடுத்தி சில ஊடகங்கள் நேற்று செய்திகளை வெளியிட்டிருந்தன. இது தொடர்பில் கொழும்பு உயர் மறை மாவட்டப் பேராயரின் செயலாளர் அருட்தந்தை சிறில் காமினி அடிகளார் தெரிவிக்கையில், குத்தகைய செய்திகள் தவறான பிரசாரங்கள் என்றும் கொழும்பு உயர் மறை மாவட்டமோ வத்திக்கானோ உத்தி யோகபூர்வமாக அத்தகைய அறிவிப் பொன்றினை விடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply