மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் முன்னாள் அரசியல்வாதி TID விசாரணை நடைபெறுகிறது : அஜித் ரோஹண

மலேஷியாவிலிருந்து புதன்கிழமை நாடு கடத்தப்பட்ட மொஹமட் ஹுசைன் மொஹமட் சுலைமான் என அடையாளம் காணப்பட்ட, அல்கொய்தாவுடன் தொடர்பான இலங்கையர், 2002 இல் செய்யப்பட்ட கொலைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நீர்கொ ழும்பு மாநகரசபை உறுப்பினர் என விசாரணையிலிருந்து தெரியவந் துள்ளது. அவர் 1998 தொடக்கம் 2002 வரையான காலப்பகுதியில் நீர்கொழும்பு மாநகரசபை உறுப்பினராக இருந்துள்ளார். நால்வருடன் சேர்ந்து 2002 இல் ஒரு முஸ்லிம் வர்த்தகரை கொலை செய்த இவர், நாட்டை விட்டு ஓடினார். ஆயினும் நீர்கொழும்பு உயர் நீதிமன்றம் இவருக்கு இவ்வ ருடம் மரணதண்டனை விதித்தது.

இவரை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்வதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண கூறினார்.

சுலைமான், கோலாலம்பூரில் மே மாதம் கைது செய்யப்பட்டார். இவர் தென்னிந்தியாவிலுள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் துணைத்தூதரங்களின் மீது பயங்கரவாதத் தாக்குதல் செய்ய மேற்கொள் ளப்பட்ட சதியில் ஈடுபட்டவர்களில் ஒருவர் என சந்தேகிக்கப்படுகின்றது.

சுலைமானை இந்ததியாவுக்கு அனுப்புமாறு இந்தியா கேட்டு வருகின்றது.

பாகிஸ்தானின் புலனாய்வு சேவையில் நியமிக்கப்பட்ட வேறொரு இலங்கையரான மொஹமட் சாகிர் ஹுசைன் என்பவருடன் சேர்ந்து இவர் இந்த சதியை திட்டமிட்டார் என இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

தமிழ் நாட்டு பொலிஸார் ஹுசைனை ஏப்ரல் 29ஆம் திகதி கைதுசெய்து விசாரித்தபோது பெறப்பட்ட தகவல்கள் சுலைமானின் கைதுக்கு வழி வகுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply