புலிகள் மீதான தடைநீக்கம் முழு உலகுக்கும் அச்சுறுத்தல் சர்வமதத் தலைவர்கள் தெரிவிப்பு

ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான தடையை நீக்கியமையானது இலங்கைக்கு மட்டுமன்றி முழு உலகிற்குமே அச்சுறுத்தலாகியுள்ளது. இலங்கை மக்களின் அமைதியான வாழ்க்கை தொடர வேண்டுமாயின் புலிகள் மீதான தடை நீடிக்கப்பட வேண்டுமென சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வேந்தர் வண. பேராசிரியர் கம்புறுகமுவே வஜிர தேரர் தெரிவித்தார். சர்வமத தலைவர்களின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பில் நடத்தப்பட்டது. இதன்போதே இவர் மேற்கண்ட கருத்தினை முன்வைத்தார். நாட்டிற்கு நிரந்தர சமாதானம் கிடைத்துள்ள போதும் வடக்கில் வாழும் சில புலி ஆதரவாளர்களும் அமைச்சர்களும் அதனை அனுபவிப்பதனை விடுத்து அரசாங்கம் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். வெகு விரைவில் நடத்தப்படவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் சதி முயற்சியாகவே நாம் இதனைக் காண்கின்றோம்.

மோதல்களின் விளைவுகளால் உலகில் மக்கள் துன்புற்று வரும் நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே யுத்தமில்லாத தேசமாக இலங்கையை உருவாக்கியுள்ளார். மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. இதனைப் பொறுத்துக்கொள்ள இயலாத சில வெளிநாடுகள் எமது நாட்டில் சிக்கலைத் தோற்றுவித்து அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கின்றனவென்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சமய விவகார இணைப்புச் செயலாளர் வண. சரத் ஹெட்டியாரச்சி, எல்.ரீ.ரீ.ஈ.யினர் அரசாங்கத்துக்கெதிராக சண்டையிடுவதற்கு வெளிநாடுகளின் ஆதரவினை பெற்றிருந்தனர். வெளிநாடுகளிலிருந்து கிடைத்த பணம் மற்றும் ஆயுதங்களைக் கொண்டு இவர்கள் பல உயிர்களை கொன்று குவித்தனர். ஐரோப்பிய ஒன்றியம் இதனை ஒரு பயங்கரவாத அமைப்பாக கருதியே தடை விதித்திருந்தது. ஆனால் இப்போது எல்.ரீ.ரீ.ஈ.யினரை வேறு கோணத்தில் பார்க்கின்றது. மீண்டும் நாட்டில் குழப்ப நிலை தோன்ற வேண்டுமென்பதே இதன் நோக்கமாகவுள்ளதெனவும் தெரிவித்தார்.

இலங்கையர்களாகிய நாம் வெளிநாடுகளுக்கு இரையாகக்கூடாது. சர்வதேச நாடுகளின் தலையீடுகளால் எகிப்து, சிரியா மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்கள் எமக்கு நல்ல படிப்பினையாக இருக்க வேண்டுமென இந்து சமய விவகாரங்களுக்கான ஜனாதிபதி இணைப்பாளர் ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்தார்.

நாட்டை பயங்கரமான அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்க வேண்டியதே இப்பொழுதைய உடனடித்தேவையே தவிர நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பற்றிய விவாதமல்லவென ஜனாதிபதியின் இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான இணைப்பாளர் ஹசன் மெளலானா தெரிவித்தார். நாட்டை நேசிக்கும் மக்கள் நிரந்தரமான அபிவிருத்தி மற்றும் சமாதானத்திற்காக இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டிற்கு நிரந்தர சமாதானம் கிடைத்துள்ள போதும் வடக்கில் வாழும் சில புலி ஆதரவாளர்களும் அமைச்சர்களும் அதனை அனுபவிப்பதனை விடுத்து அரசாங்கம் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். வெகு விரைவில் நடத்தப்படவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் சதி முயற்சியாகவே நாம் இதனைக் காண்கின்றோம். மோதல்களின் விளைவுகளால் உலகில் மக்கள் துன்புற்று வரும் நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே யுத்தமில்லாத தேசமாக இலங்கையை உருவாக்கியுள்ளார்.

மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. இதனைப் பொறுத்துக்கொள்ள இயலாத சில வெளிநாடுகள் எமது நாட்டில் சிக்கலைத் தோற்றுவித்து அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கின்றனவென்றும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதியின் சமய விவகார இணைப்புச் செயலாளர் வண. சரத் ஹெட்டியாரச்சி, எல்.ரீ.ரீ.ஈ.யினர் அரசாங்கத்துக்கெதிராக சண்டையிடுவதற்கு வெளிநாடுகளின் ஆதரவினை பெற்றிருந்தனர்.

வெளிநாடுகளிலிருந்து கிடைத்த பணம் மற்றும் ஆயுதங்களைக் கொண்டு இவர்கள் பல உயிர்களை கொன்று குவித்தனர். ஐரோப்பிய ஒன்றியம் இதனை ஒரு பயங்கரவாத அமைப்பாக கருதியே தடை விதித்திருந்தது. ஆனால் இப்போது எல்.ரீ.ரீ.ஈ.யினரை வேறு கோணத்தில் பார்க்கின்றது. மீண்டும் நாட்டில் குழப்ப நிலை தோன்ற வேண்டுமென்பதே இதன் நோக்கமாகவுள்ளதெனவும் தெரிவித்தார்.

இலங்கையர்களாகிய நாம் வெளிநாடுகளுக்கு இரையாகக்கூடாது. சர்வதேச நாடுகளின் தலையீடுகளால் எகிப்து, சிரியா மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்கள் எமக்கு நல்ல படிப்பினையாக இருக்க வேண்டுமென இந்து சமய விவகாரங்களுக்கான ஜனாதிபதி இணைப்பாளர் ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்தார்.

நாட்டை பயங்கரமான அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்க வேண்டியதே இப்பொழுதைய உடனடித்தேவையே தவிர நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பற்றிய விவாதமல்லவென ஜனாதிபதியின் இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான இணைப்பாளர் ஹசன் மெளலானா தெரிவித்தார். நாட்டை நேசிக்கும் மக்கள் நிரந்தரமான அபிவிருத்தி மற்றும் சமாதானத்திற்காக இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

You can leave a response, or trackback from your own site.

Leave a Reply