நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை விடுவிக்ககோரி போகோஹாரம் தீவிரவாதிகளுக்கு மலாலா வேண்டுகோள்
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சிறுமி மலாலாவுக்கு அமெரிக்கா தனது நாட்டின் உயரிய விருதான லிபர்டி விருதை வழங்கி கவுரவித்தது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுடன் அவருக்கு 61 லட்ச ரூபாய் பணமும் வழங்கப்பட்டது. விருதை பெற்றுக் கொண்ட மலாலா மேடையில் உரையாற்றும்போது, இந்த பணம் முழுவதையும் தான் பிறந்த நாடான பாகிஸ்தானில் உள்ள ஏழை சிறுவர் மற்றும் சிறுமியர்கள் கல்வி பயில செலவிட உள்ளதாக மலாலா கூறியுள்ளார். மேலும் நைஜீரியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் கடத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட மாணவிகளை போகோஹாரம் தீவிரவாதிகள் விடுவிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply