தீவிரவாதத்தை எதிர்கொள்ள சகல நாடுகளும் ஒன்றுபட வேண்டும் கனடா தாக்குதல் குறித்து ஜனாதிபதி கவலை

உலகின் பல நாடுகளிலும் இடம்பெற்று வரும் தீவிரவாத நடவடிக்கைகள் மிகுந்த கவலையளிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டுள்ளார். தற்போது கனடாவில் இடம்பெற்றுள்ள தீவிரவாத சம்பவம் தொடர்பில் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் போராடுவதற்கு அனைத்து நாட்டினரும் சரிசமமான பங்குதாரர்களாக ஒன்றிணைய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது டுவிட்டர் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் கனடிய பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் சிலர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தமது கவலையை வெளியிட்டுள்ள ஜனாதிபதி, தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடுவதில் நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையிலும் சர்வதேச நாடுகளிலும் நடைபெறும் சர்வதேச நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றுகின்ற போதெல்லாம் தீவிரவாதத்துக்கு எதிராகச் செயற்படுவதில் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்பதைக் கூறி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply