ஏமனில் இரு பிரிவினரிடையே மோதல்: ஒரே நாளில் 48 பேர் பலி

எண்ணெய் வளமிக்க அரபு நாடான ஏமனில், தலைநகர் சானாவை ஷியா பிரிவு ஹவ்தி போராளிகள் கடந்த மாதம் 21-ந் தேதி கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து அங்கு அந்த போராளிகளும், சன்னி பிரிவு அல்கொய்தா தீவிரவாதிகளும் தொடர்ந்து மோதி வருகின்றனர். இந்த நிலையில், அல் பெய்தா மாகாணத்தில் உள்ள ரத்தா நகரில், நேற்று முன்தினம் இவ்விரு பிரிவினரிடையே பயங்கர மோதல் வெடித்தது. இந்த மோதலில் ஷியா பிரிவு ஹவ்தி போராளிகள் 30 பேரும், அல்கொய்தா தீவிரவாதிகள் 18 பேரும் கொல்லப்பட்டனர்.இது தொடர்பாக அல்கொய்தா தீவிரவாதிகள் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில், “ரத்தாவில் ஹவ்தி கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டோம். அவர்களது வீடுகளை தரைமட்டம் ஆக்கினோம்” என கூறி உள்ளனர். அதே நேரத்தில் இரு தரப்பு உயிர்ப்பலி தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதற்கிடையே, ராணுவ சோதனை சாவடி மீது தாக்குதல் நடத்தி, 5 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அல்கொய்தா தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply