சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 16 பேர் பலி
சீனாவில் ஜிங்கியாங் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 16 பேர் பலியாயினர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர். சீனாவில் உயகுவார் தன்னாட்சி பிரந்திய பகுதியின் தலைநகரமான உருமகி பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்க ஒன்றில் 33 பணியாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது தீடிரெனெ ஏற்பட்ட விபத்தில் 16 பேர் பலியாயினர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் ஆறு பேர் காயம் இன்றி தப்பினர்.காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தகவலை அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply