முறியடிக்கப்பட முடியாத பட்ஜட் சர்வ மதத் தலைவர்கள் வாழ்த்து
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மக்க ளுக்கான சலுகைகளையும், வரப்பிரசாதங்களையும் இனி எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் ஒருபோதும் முறியடிக்க முடியாது எனுமளவிற்கு அதில் பல விசேட அம்சங்கள் பொதிந்துள்ளன. இதற்காக ஜனாதிபதியை ஆசிர்வதித்து பாராட்டுவதாக நாட்டின் அதி உச்ச பீடங்களான சர்வமதத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் மனமறிந்து சேவையாற்றும் ஜனாதிபதி மஹிந்தவை இனி எக்காலத்திலும் எவராலும் வெற்றி கொள்ள முடியாது. இனிவரும் காலங்களில் இடம்பெறவுள்ள அனைத்துத் தேர்தல் களிலும் ஜனாதிபதி மஹிந்தவே வெற்றி பெற்று ஜனாதிபதியாக ஆட்சி பீடமேறுவார். அதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.
அதனால் இனி வேறொரு கட்சி இந்த நாட்டை ஆட்சி செய்யும் என எவராவது நினைப்பது என்பது அவர்கள் காணும் பகற்கனவே. எவராலும் முறியடிக்கப்பட முடியாத இந்த வெற்றிகரமான பட்ஜட்டை சமர்ப்பித்த நாட்டின் தலைவருக்கு எமது நல்லாசிகள் என்றும் நான்கு மதத் தலைவர்களும் தெரிவித்துள்ளனர். சர்வமதத் தலைவர்களான வண. கும்புறுகமுவ வஜிர நாயக்க தேரர், வண. கலகம தம்மரன்ஸி நாயக்க தேரர், பிரம்மஸ்ரீ. பாபுசர்மா இராமச்சந்திர குருக்கள், சங்கைக்குரிய மெளலவி கலாநிதி அஷ். ஷெய்யத் ஹசன் மெளலானா, வண. பிதா ஹெட்டியாராச்சி ஆகியோர் கூட்டாகத் தமது ஆசிகளையும், பாராட்டுக்களையும் ஜனாதிபதிக்குத் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply