உலக சமாதானத்துக்கு பௌத்த தர்மம் என்றும் வழிகோலும் : ஜனாதிபதி

நெருக்கடிகள் நிறைந்த இன்றைய உலகுக்கு புத்த பிரானின் தர்மமானது அன்று போல் இன்றும் பொருத்தமானதாக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 27 வது உலக பெளத்த மாநாட்டுக்கு அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். சமாதானம், கருணை, அன்பு, ஒருவருக்கு ஒருவர் கெளரவம் செய்தல் ஆகிய அடிப்படையிலான பெளத்த தர்மம் உலக சமாதானத்துக்கு உந்து சக்தியாகும்.

30 நாடுகளைச் சேர்ந்த பெளத்த மதத் தலைவர்கள் மற்றும் 600க்கும் மேற் பட்டவர்கள் பங்குபற்றிய இம்மாநாட்டில் ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி பலரின் கவனத்தை ஈர்த்ததோடு பாரா ட்டையும் பெற்றது.

உலக சமாதானம், சகவாழ்வு ஆகியவற்றை மேலும் பலமூட்டி செயற்படும் நோக்கில் இம்மாநாடு மூன்று நாட்களாக சீனாவில் பஓஜி நகரில் பாமன் விகாரையில் நடைபெற்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply