நைஜீரியா தற்கொலை படை தாக்குதலில் மாணவர்கள் பலி 50 ஆக உயர்வு

நைஜீரியாவில் ‘போகோஹாரம்’ தீவிரவாதிகளின் அட்டகாசம் எல்லை மீறி வருகிறது. 270 மாணவிகளை கடத்தி சிறை வைத்துள்ளனர். அவர்களை இன்னும் விடுவிக்கவில்லை. தினமும் பொது மக்களை கொன்று குவிக்கின்றனர். இவர்களின் அட்டூழியம் தொடர்ந்து வரும் நிலையில் நேற்று வடக்கு நைஜீரியாவில் யொதிஸ்கும் நகரில் உள்ள அரசு அறிவியல் தொழில் நுட்ப கல்லூரியில் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.

நேற்று காலை வழிபாட்டுக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடி இருந்தனர். அப்போது மாணவனை போல் சீருடை அணிந்து வந்த தற்கொலை படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த சக்தி வாய்ந்த குண்டை வெடிக்க செய்தான்.

அப்போது குண்டுகள் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 46 மாணவர்கள் பலியாகினர். 100–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

உடனே, அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply