கொழும்பு ஆசியாவின் ஆச்சரியம் குடிசை வாழ் மக்களுக்கு தொடர்மாடிகள்
குடிசையில் இருந்து மாளிகைக்கு என்ற மஹிந்த சிந்தனை எண்ணக்கருவின் கீழ் கொழும்பில் குடிசைகளில் வாழும் மக்களுக்கு தொடர்மாடிகளில் நிரந்தர வீடுகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இம்மாதம் 18ஆம் திகதி நடைபெற உள்ளது.இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பிலுள்ள குடிசை வாழ் மக்களுக்கு தொடர்மாடி வீடமைப்புத் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.சகலருக்கும் வீடு என்ற உன்னத நோக்கில் கொழும்பில் குடிசை யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் 70,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.இதனடிப்படையில் ஹேனமுல்லை, எதிரிசிங்க தோட்டம், கொலன்னாவ சாலமுல்ல, பர்கியூசன் வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட உள்ளன.
இதனடிப்படையில் ஹேனமுல்லையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 1137 வீடுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் எதிர்வரும் 18ம் திகதி மக்களிடம் கைளிக்கப்பட உள்ளதுடன் 21ஆம் திகதி எதிரிசிங்க மாவத்தையில் 564 வீடுகளும், கொலன்னாவ சாலமுல்லையில் 216 வீடுகள் டிசம்பர் மாதம் முதலாம் திகதியும் பர்கியுசன் வீதியில் 872 வீடுகள் டிசம்பர் மாதம் 8ஆம் திகதியும் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக ஒப்படைக்கப்பட உள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply