நாட்டில் யுத்தம் முடிந்தாலும் பயங்கரவாத நிழல்கள் வெளிநாடுகளில் ஊசலாடுகின்றன :ஜனாதிபதி மஹிந்த

நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்துள்ள போதும் பயங்கரவாதத்தின் நிழல்கள் வெளிநாடுகளில் ஊசலாடுவதால் அர்ப்பணிப்புடன் பெற்றுக் கொண்டுள்ள சுதந்திரத்தைப் பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இங்கொரு ஈராக்கோ, லிபியாவோ, எகிப்தோ எமக்குத் தேவையில்லை அவ்வாறான நிலைமை ஏற்பட இட மளிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.கம நல சேவைத்துறைக்கு கமநல சேவை அதிகாரிகள் மற்றும் ஆராய்ச்சி உத்தியோகத் தர்கள். அர்ப்பணிப்புள்ள சேவையாற் றியுள்Zர்கள். விவசாயத்துறையில் இக்காலகட்டங்களில் நாம் பல்வேறு வெற்றிகளைக் கண்டுள்ளோம்.

2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் விவசாயத்துறைக்கு நலன் பயக்கும் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மஹிந்த சிந்தனையை நாம் மக்கள் முன் சமர்ப்பித்த போது முக்கிய இரண்டு விடயங்கள் சம்பந்தமாக கவனம் செலுத்தியிருந்தோம். அதிலொன்று நாட்டின் கெளரவமான சமாதானம் முப்பது வருட பயங்கரவாத யுத்தத்துக்குப் பின் அதனை எம்மால் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது.

அடுத்தது தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும் நாட்டை அபிவிருத்திக்குள்ளாக்குவதும் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் நடவடிக்கையோடு நாட்டை மீட்கும் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தையும் மேற்கொண்டோம். மாவிலாறு அணையை மூடிய போதும் விவசாயிகள் மீது கை வைத்த போதும்

அவர்களுக்கு நீரைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் முதலாவது தாக்குதலை ஆரம்பித்தோம். வெளிநாடுகளில் பாரிய நிதி மற்றும் ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டு சிறிய ரக விமானங்களை வைத்துக் கொண்டு வெளிநாடுகளின் நிதியில் தங்கி செயற்பட்ட பயங்கரவாதத்தை நாம் முடிவுக்குக் கொண்டு வந்தோம்.

அக்காலத்திலும் நாம் விவசாயத்துறை முன்னேற்றத்திற்குப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம். விவசாயக் கொள்கையில் நாம் மாற்றம் ஏற்படுத்தியிருக்காவிட்டால், அதற்கான இலக்கொன்றை வைத்து நாம் செயற்பட்டிருக்கா விட்டால் யுத்தம் மற்றும் உலக பொருளாதார நெருக்கடியின் போது நாமும் பாதிப்புக்குள்ளாகி யிருப்போம்.

உணவிற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு நாம் உணவிற்கு வெளிநாட்டை எதிர் பார்த்து அத்தோடு அவர்களின் தேவை களை நிறைவு செய்யவும் ஆளாக வேண்டியிருந்திருக்கும்.

பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்ச் செய்கையை ஆரம்பித்தோம். அதற்கு உங்களது பங்களிப்பு எமக்குக் கிடைத்தது.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் கமத் தொழில் துறைக்கு முக்கிய கவனம் செலுத்தியிருந்தது. இந்த நாட்டில் தன்னிறைவு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே அதன் இலக்காகவிருந்தது.

ஜனாதிபதித் தேர்தல் நடந்தபோது கொப்பேகடுவ யாழ்ப்பாணத்தில் வெற்றி பெற்றார். நாம் வெற்றி பெற்ற ஒரே மாவட்டமும் அதுதான். இதற்குக் காரணம் விவசாய திட்டத்தின் பிரதிபலன்கள் அவர்களுக்கு கிடைத்தமையே.

1977ற்குப் பின் கமத்தொழில்துறை கவனிக்கப்படாமற்போனது அனைத்தும் வெளிநாடுகளிலிருந்தே கொள்வனவு செய்யப்பட்டன. வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் மீது நம்பிக்கை வைத்து எமது விவசாயிகள் மீது நம்பிகையில்லாது செயற்பட்ட யுகம் அது. வயல்கள் நிரப்பப்பட்டு கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்ட காலம் அது.

அக்கால ஆட்சியாளர்கள் குளங்கள், அணைகளை நிர்மாணிக்கவில்லை. எமது விவசாயிகள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. விவசாயம் அவர்க ளுக்குத் தேவையற்ற தொன்றாகியி ருந்தது. அதற்கு அதிகாரிகளை நிய மிக்கவில்லை. இந்நிலையை நாமே மாற்றினோம்.

தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி வரும் யுகம் இது. அத்தோடு நாமும் முன்னேற வேண்டியுள்ளது. மக்கள் நவீன அறிவினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தாய்நாட்டைப் பாதுகாக்க அனைவரும் முன்னின்று செயற்படுவீர்களென்ற நம்பிக்கை எனக்குள்ளது.

இந்நிகழ்வில் தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி, முறையான கொள்கைகள் இல்லாத காரணத்தால் கடந்த காலத்தில் கமத்தொழில்துறை செயற்பாடுகள் வெற்றியளிக்கவில்லை. சில அரசியல் தலைவர்கள் இது தொடர்பில் சரியாகச் சிந்திக்கவில்லை.

நாம் விவசாயிகளுக்கான வசதி வாய்ப்புகள் ஊக்குவிப்புகளை வழங்கி வருவதால் தற்போது கமநலத்துறை துரித அபிவிருத்தி கண்டு வருகிறது. நீங்கள் அர்ப்பணிப்புடன் சேவை செய்யக் கூடியவர்கள் என்பதை நான் அறிவேன். நான் உங்களை நம்புகிறேன். நீங்களும் என்னை நம்பலாம் நான் எப்போதும் உங்களை பாதுகாப்பேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply