இலங்கையில் வன்முறையற்ற விடயங்களை வலுப்படுத்தி சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் : மிச்சேல் ஜே சிசன்

சமாதானத்தை ஏற்படுத்தி வன்முறையற்ற விடயங்களை வலுப்படுத்தி, மனித உரிமைகளை மதித்தல் வேண்டும் மற்றவர்களின் சிந்தனைகளுக்கும் இடம் கொடுக்க வேண்டும் என இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற சமாதானமும் நல்லினக்கமும் எனும் தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் தொடர்ந்துரையாற்றிய இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன் வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் கல்வியை மேம்படுத்துதல், சமூக நல்லினக்கத்தை உருவாக்குதல், சிவில் சமூக அமைப்புக்களின் நடவடிக்கைகளுக்கு உதவுதல், கலாசாரம் மற்றும் விளையாட்டு இளைஞர்களை வலுப்படுத்துதல் போன்ற விடயங்களை மேற் கொள்ள வேண்டும்.

இளைஞர்களை வலுப்படுத்துவதுடன் இளைஞர்களின் முறன்பாடுகளை உரிய முறையில் தீர்த்தல் சிவில் செயல் திட்டங்களில் பங்கு பற்றுதல் பால் நிலை சமத்துவம், வன்முறையற்ற தொடர்பாடலை தூண்டுதல், போன்ற செயற் திட்டங்களை தேசிய சமாதனப் பேரவை செய்து வருவது இங்கு பாராட்டத்தக்கதாகும்.

தேசிய சமாதானப் பேரவையின் செயற்திட்டங்களில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். சுதந்திரமாகவும் முக்கியத்துவம் வாய்ந்த செயற்திட்டங்களை தேசிய சமாதனப் பேரவை நடாத்திக் கொண்டிருக்கின்றது. கடந்த இரண்டு வருடங்களாக தேசிய சமாதானப் பேரவையின் வேலைத்திட்டங்களை கவனித்து வருகின்றேன். தேசிய சமாதானப் பேரவஇயின் ரசிகையாக இருந்து வருகின்றேன்.

தேசிய சமாதானப் பேரவையின் செயல் திட்டங்களானது முறன்பாடுகளை தீர்த்தல், மக்களை விழிப்பூட்டல், சட்ட ஆலோசனைகளை வழங்குதல், போன்ற செயல் திட்டங்கள் பாராட்டத்தக்கது. அதே போன்று சமாதானப் பேரவையின் நடவடிக்கையின் மூலம் விழிப்புனர்வுகளை ஏற்படுத்துதல் மற்றவர்களின் கருத்துக்களையும் செவி மடுத்தல் போன்ற செயற் திட்டங்களில் ஆர்வங்காட்டுவது மகிழ்ச்சியளிக்கின்றது.

கலாசாரத்தை வலுப்படுத்துதல், சமாதானத்தை வலுப்படுத்தல், அதே போன்று வன்முறையற்ற விடங்களை வலுப்படுத்துதல், மனித உரிமைகளை மதித்தல், மற்றவர்களின் சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க வேண்டும். அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் ஹெரி அவர்கள் இன்று அதிகாலை என்னுடன் தொடர்பு கொண்டு பேசியபோது ஐக்கிய அமெரிக்கா இலங்கையிலுள்ள அனைத்து மக்களின் தேவைகளில் பங்களிப்பு செய்வதுடன் அனைத்து நேரங்களிலும் இலங்கை மக்களுடன் கை கோர்த்து நிற்பதற்கு தயாராக இருப்பதாகவும் அதே போன்று இலங்கை மக்களின் வெற்றிகளிலும் பங்களிப்பு செய்வதாகவும் கூறினார்.
இலங்கையில் மத நல்லினக்கத்தை ஏற்படுத்தும் மத தலைவர்கள் சிவில் சமூக அமைப்புக்களின் தலைவர்கள், நல்லென்னத்துடன் செயற்படும் சிவில் அமைப்புக்கள் அதே போன்று நல்லினக்கத்தை வலுப்படுத்தும் அனைத்து தரப்பினருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். நான் மட்டக்களப்பு வருகை தந்திருப்பது நான்காவது தடவையாகும்.
எனது தந்தை 1955 காலபப்குதியில் மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ளார். இது மறக்க முடியாத சம்பவமாகும். மட்டக்களப்பில் பாடுமீன் கதை யொன்றுள்ளது. பாடுமீன்களை காண்பதற்காக காலையிலும் மாலையிலும் மட்டக்களப்பு வாவிகளுக்கு செல்வேன் ஆனால் இதுவரையில் பாடுமீன்களை நான் கண்டதில்லை. கிழக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து மகிழச்சியடைகின்றேன் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார். இந்த கலந்துரையாடலில் தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜஹான் பெரேரா மற்றும் முக்கியஸ்தர்கள், மத தலைவர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply