ஐ.தே.க. தனது பெயரையும் தலைமையகத்தையும் மாற்றும் நிலை ஏற்படும் :அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சி தமது பெயரையும் சிறிகொத்த தலைமையகத் தையும் மாற்றி புதிய பிறப்புச் சான்றிதழுடன் அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்படுமென்று விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இதுவரையில், ஐக்கிய தேசியக்கட்சிக்கு தமது சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தவும் யானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டுவதற்கு முடியாத நிலையிலும் புதிய திட்டமொன்றை உருவாக்கி கட்சியை பாதுகாக்க புதிய வியூகமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்: தற்போது சகல அரசியல் கட்சிகளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆட்சியில் அமர்த்துவதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ள இவ்வேளையில், அதனை தடுக்க எந்தக் கட்சியோ, தனி நபரோ இந்நாட்டில் இல்லையென்று தெரிவித்தார்.

இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் தோல்வியடைந்த பின்னர் தம்மோடு இருந்த பலர் தேர்தல் பெறுபேறு வருவதற்கு முன்னர் கட்சியை விட்டு சென்றுவிட்டனர். இன்று கிராமப்புற மக்கள் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி தொடர்பில் எதுவுமே கதைப்பதில்லை. அவர்களுக்கு சுதந்திரமாக வாழ்வதற்கு ஏற்ற சூழலும் சமாதானமாக வாழும் சூழலையுமே எதிர்பார்க்கின்றனர்.

எனவே எதிர்க்கட்சியினர் வெளிநாட்டு அழுத்தங்களுக்கும் டொலர் நோட்டுகளுக்கும் அடிமையாகி இந்நாட்டை அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலைக்கு கொண்டு வருவதே இவர்களின் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply