போர் விமானங்கள் குண்டு மழை: பாகிஸ்தானில் 39 தீவிரவாதிகள் பலி வாகா தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர்களும் சாவு
இந்திய-பாகிஸ்தான் நாடுகளின் எல்லையாக அமைந்துள்ள வாகா எல்லையில், பாகிஸ்தான் பகுதியில் கடந்த 2-ந் தேதி மாலை கொடி இறக்க நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு அங்கிருந்து மக்கள் கூட்டம் புறப்பட தயாரானபோது, ஒரு தற்கொலைப்படை தீவிரவாதி தனது உடலில் கட்டி வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தார். அந்த பகுதியையே அதிரச்செய்த இந்த குண்டு வெடிப்பில் 60 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதிகள் கைபர் மாகாணத்தில் உள்ள டராஸ் பகுதியில் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை மூலம் ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் நேற்று முன்தினம் குண்டு மழை பொழிந்தன. இதில் 13 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 17 பேர் காயம் அடைந்தனர். மேலும், அகாகேல், பாரா உள்ளிட்ட பகுதிகளில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே அடுத்தடுத்து கடும் மோதல்கள் ஏற்பட்டன. இந்த மோதல்களில் 26 தீவிரவாதிகள் பலியாகினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply