சம்பந்தன், சுமந்திரன், விக்கி ஆகியோர் புலிகள் அல்லர் :அமைச்சர் டிலான் பெரேரா

தமிழ் தேசிய கூட்டமைப்பில் புலிகளுடன் தொடர்புடையவர்கள் உள்ளபோதும் ஆர்.சம்பந்தனோ, சுமந்திரனோ அல்லது விக்னேஷ்வரனோ புலிகளல்லர் என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் சிலர் இருக்கின்றனர். ஆனால் சம்பந்தனோ, சுமந்திரனோ, சி.வி.விக்னேஷ்வரனோ புலிகளல்லர்.தமிழ் பெயர் இருப்பதற்காக ஒருவரை புலி என்று கூற முடியாது. ஆனால் தமிழ் பெயர் உள்ள ஒருவருக்கு இலங்கை நிரந்தர வதிவிட பிரதிநிதியால் உத்தியோகபூர்வ வாசஸ்தல திருத்த பணி வழங்கப்பட்டதற்காக சஜித் எம்.பி அவரை புலி என்கிறார்.

இந்தியாவுடன் கூடுதல் தொடர்பு வைப்பதாக த.தே.கூ. குற்றஞ்சாட்டுகிறது. ஆனால் ஜே.வி.பி யோ நாம் இந்தியாவுடன் கூடுதல் தொடர்பு வைப்பதாக குறை கூறுகிறது.

சஜித் பிரேமதாஸ 13 ஆவது திருத்தத்தை முழுமையாக ஏற்கவில்லை. ஆரம்பத்தில் அவர் அதற்கு எதிரான நிலைப்பாட்டிலே இருந்தார். அவரது தந்தையும் 13ஆவது திருத்தத்தை எதிர்த்து வந்தார். 13ஆவது திருத்தத்தை குப்பையென்று யுத்த காலத்தில் கூறிய சம்பந்தன் இன்று அதனை அமுல்படுத்துமாறு கோருகிறார். நான் நீண்ட காலமாக இருந்த நிலைப்பாட்டிற்கு சஜித் பிரேமதாஸ வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

வெளிவிவகார சேவையில் சிறந்த தூதரக சேவை இருக்கையில் தனியார் நிறுவனங்களின் உதவி தேவையில்லை. எமது வெளிநாட்டுக் கொள்கை சகல நாடுகளுடன் தொடர்பு வைத்திருப் பதையே எதிர்கட்சியின் உரைகள் உறுதி செய்கின்றன.

பொது நலவாய செயலாளர் நாயகம் பதவிக்கு கதிர்காமர் போட்டியிட்ட போது ஐ.தே.க நியூசிலாந்து வேட்பாளருக்கே ஆதரவு வழங்கியது. ஆனால் கதிர்காமர் சிறந்த வெளிவிவகார அமைச்சராக இருந்ததாக சஜித் எம்.பி இன்று பாராட்டுகிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply