மியான்மர் அதிபர் தேர்தல்: எதிர்க்கட்சி தலைவர் போட்டியிட தடை விதிப்பது அர்த்தம் அற்றது ஒபாமா கண்டனம்
மியான்மர் அதிபர் தேர்தலில், அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் போட்டியிட தடை விதிப்பது அர்த்தம் அற்றது என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கண்டனம் தெரிவித்தார். பர்மா என்றழைக்கப்பட்டு வந்த மியான்மர் நாட்டில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கிறது. அங்கு, ஜனநாயக மீட்புக்காக தன்னையே அர்ப்பணித்த அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் சூ கி, இந்த தேர்தலில் போட்டியிட முடியாது. அவரது மகன்கள் இருவர், வெளிநாட்டு குடிமகன்கள் என்பதால் சூ கி அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்த நாட்டின் அரசியல் சட்டப்பிரிவு தடையாக இருக்கிறது.இந்த நிலையில், கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டுக்கு மியான்மர் சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, யாங்கோனில் எதிர்க்கட்சி தலைவர் சூ கி–யை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார்.
இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறும் விதத்தில் கட்டித்தழுவி முத்தமிட்டனர்.
பின்னர் ஒபாமா நிருபர்களிடம் பேசுகையில், ‘‘எதிர்க்கட்சி தலைவர் சூ கி அதிபர் தேர்தலில் போட்டியிட தடையாக சட்டப்பிரிவை காட்டுகிறார்கள். ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அவரது பிள்ளைகளை தடையாக காட்டுகிற சட்டப்பிரிவு அர்த்தம் அற்றது’’ என கூறி கண்டனம் தெரிவித்தார்.
மேலும், ‘‘ஜனநாயக கண்ணோட்டத்தில் பார்த்தால், குறிப்பிட்ட ஒருவருக்கு எதிராக பாரபட்சம் காட்டுவது என்பது சரியானது அல்ல’’ எனவும் ஒபாமா கருத்து தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply