கறுப்பு பணத்தை மீட்க உலக நாடுகள் உதவ வேண்டும்: பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திரமோடி ‘ஜி 20’ மாநட்டில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு அவர் 5 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். முதல் நாளான நேற்று குயின்ஸ்லாந்து தொழில் நுட்ப பல்கலைக் கழகம் சென்று மாணவ– மாணவிகளுடன் கலந்துரையாடினார். இன்று பிரிஸ்பேன் நகரில் உள்ள குயின்ஸ்லாந்து பாராளுமன்ற கட்டிடத்தில் ‘ஜி 20’ நாடுகள் மாநாடு தொடங்கியது. இதில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடியை ஆஸ்திரேலிய பிரமதர் டோனி அப்போட் கை குலுக்கி வரவேற்றார். முன்னதாக பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹலாந்து, ஐப்பான் பிரதமர் அபே ஆகியோரை சந்தித்துப் பேசினார். ‘பிரிக்ஸ்’ நாட்டு தலைவர்களையும் சந்தித்து பேசினார்.பின்னர் பிரதமர் மோடி ‘ஜி 20’ மாநாட்டில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:–

கறுப்பு பணம் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. இது இந்தியாவுக்கு பெரும் சவாலாக உள்ளது. கறுப்பு பணத்தை மீட்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். கறுப்பு பணம் மீட்பதில் ‘ஜி 20’ நாடுகள் உதவ வேண்டும். அரசியல் தலையீடு இல்லாமல் சீர்திருத்தம் நடைபெற வேண்டும். இது போன்ற சீர்திருத்தங்கள் தங்கள் மக்களால் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

28 ஆண்டுகளில் ராஜீவ் காந்திக்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply