நேபாளத்தில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி 25ந் திகதி காத்மண்டு பயணம்
நேபாளத்தில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள் எதிர்வரும் 25ம் திகதி காத்மண்டுவுக்கு விஜயம் செய்யவுள்ளனர். இதன்படி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஸ்ரப் கானி, பூட்டான் பிரதமர் சேரிங் டப்காய், மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல்லா யேமன் ஆகியோர் வருகை தரவுள்ளதாக நேபாள ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.18வது சார்க் மாநாடு நோபாளத் தலைநகர் காத்மண்டுவில் நவம்பர் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply