நாட்டைப் பாதுகாப்பதற்கு மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை எழுந்துள்ளது : ஜே.வி.பி
நாட்டைப் பாதுகாப்பதற்கு ஆயுதம் எடுத்துப் போராட வேண்டிய அவசியம் தற்போது மீண்டும் எழுந்துள்ளது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.ஜே.வி.பி போராளிகளை நினைவுகூரும் கார்த்திகை வீரர்கள் தினம் கொழும்பு விகாரமகா தேவி பூங்காவின் திறந்த வெளி அரங்கில் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு:ஜே.வி.பி. ஆயுதப் போராட்டம் நடத்திய காலங்களை விட நாடு இன்று பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. நாட்டின் வளங்கள் வெளிநாடுகளுக்கு மொத்தமாக தாரை வார்க்கப்படுகிறது. ராஜபக்ஷ குடும்பத்தினர் நாட்டை இன்னும் பல நூற்றாண்டுகள் அபிவிருத்தியில் பின்தங்கி இருக்கச் செய்யும் விதத்தில் கொள்ளையடிக்கிறார்கள்.
எதிர்கால சந்ததியினருக்காக இவர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பு எமக்கு உண்டு. 1980களை விட மோசமான அழிவுப் பாதையில் நாடு சென்று கொண்டிருக்கிறது. எனவே நாட்டை இன்னும் ஒரு ஆயுதப்போராட்டம் தேவை. இது இன்று தவிர்க்க முடியாததாகி விட்டது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply