ஜனா­தி­பதி தேர்தல் குறித்த வர்த்­த­மானி அறி­வித்தல் புதன்கிழமை வெளியீ­டு

எதிர்­வரும் ஜன­வரி மாதம் முதல் வாரத்தில் நடை­பெ­ற­வுள்ள ஜனாதி­பதி தேர்­தலுக்­கா­ன வர்த்­த­மானி அறி­வித்தல் நாளை மறுதினம் 19 ஆம் திகதி வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது. ஜனா­தி­ப­தியின் இரண்­டா­வது பத­விக்­கால­­த்­துக்­கான நான்கு வரு­ட­ங்கள் எதிர்­வரும் 19 ஆம் திக­தி­­யுடன் நிறை­வ­­டை­கின்­ற­மை யினால் அன்­றைய தினமே வர்த்­த­மானி அறி­வித்­தலை வெளி­யிட அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் இன்னும் 72 மணித்­தி­யா­ல­ங்­க­ளில் ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யாகும் என நம்­பு­வ­தாக ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்திர முன்­ன­ணியின் பொதுச் செய­லாளரும் அமைச்­ச­ரு­மான சுசில் பிரேம்­ஜ­யந்த தெரி­வித்­தார்.

இந்­நி­லையில் தேர்தலை நடத்­து­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­களும் முன்­­னெ­டுக்­கப்­பட்­டு­வ­­ரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அதன்­படி எதிர்­வரும் 2015 ஆம் ஆண்டு ஜன­வ­ரி மாதம் முதல் வார­த்தில் ஜனா­தி­பதி தேர்தல் நடை­­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

நேற்று கொழும்பில் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் அமைச்சர் சுசில் பிரேம்­ஜ­யந்த குறிப்­பி­டு­கையில்,

அடுத்த ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி தயா­ரா­கி­­விட்­டது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியை நாட­ளா­விய ரீதியில் தயார் படுத்­து­வ­தற்­கான அனைத்து வித­மான முயற்­சி­க­ளிலும் நாங்கள் ஈடு­பட்­டுள்ளோம்.

குறிப்­பா­க இன்­றைய தினம்(நேற்று) கொழும்­புக்கு ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணியின் 2912 உள்­­ளூ­­ராட்­சி­மன்ற உறுப்­பி­னர்­­க­ளையும் கொழும்­புக்கு வர­வ­ழைத்­து­ள்ளோம். அதன்­படி ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ஷவை வெற்­றி­­பெ­ற­­வைப்­ப­தற்­காக நாங்­கள் பாடு­பட்­டு­வ­­ரு­கின்றோம்.

அந்த­வ­கையில் இன்னும் 72 மணித்­தி­யா­ல­­யத்தில் ஜனாதி­பதி தேர்­த­லுக்­­கான வர்த்­த­மானி அறிவித்­தல் வெளி­யா­கலாம். வெளி­யாகும் என்று நாங்கள் நம்­பு­கின்றோம். ஆனால் எதிர்க்­கட்­சி­யினர் இன்னும் பொது வேட்­பா­ளரை தெரிவு செய்யும் செயற்­பாட்டில் ஈடு­பட்­டுள்­ளனர். தேர்தல் நெருங்­கி­யுள்ள நிலை­யிலும் அவ­ர்க­ளினால் இன்னும் பொது வேட்­பா­ளரை தெரிவு செய்ய முடி­ய­வில்­லை. பொது வேட்­பாளர் இன்­னும் வரா­ம­லேயே உள்­ளார்.

ஆனால் எந்­த பொது­வேட்­பாளர் வந்­தாலும் எமது ஜனா­தி­ப­திக்கு அது சவா­லாக அமை­யாது. ஜனா­தி­பதி தேர்­தலில் நாங்கள் வெற்­றி­பெ­றுவோம். குறிப்­பாக கடந்த 202102 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் பெற்ற மேல­திக வாக்­கு­களை விட அதிக மேல­திக வாக்­கு­களை பெற்­று ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ வெற்­றி­யீ்ட்­டு­­வார்.
அதா­வது இம்­மு­றை ஜனா­தி­பதி தேர்­த­ல் முடிவில் இரண்டாம் முறை வாக்கு எண்ணும் நட­வ­டிக்­கை இடம்­பெ­ற­வேண்­டி­ய அவ­சி­ய­மில்லை. முதல் தட­வை­யி­லேயே ஜனா­தி­பதி தேவை­யான சத­­வீ­தத்தை பெற்று­ வெற்­றி­பெ­றுவார்.

விரைவில் ஐக்­கிய மக்கள் சுத­ந்­திர முன்­ன­ணியின் தேர்தல் விஞ்­ஞா­பனம் தயா­ரா­கி­விடும். அதாவ­து நாட்­டுக்கு எதிர்­கா­லத்­துக்கு என்ன தேவை என்­ப­த­­னைக்­கொண்டு இந்த தேர்தல் விஞ்­ஞா­பனம் தயா­ரிக்­கப்­படும் என்­றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply