தமிழக மீனவர்களை விடுவிக்க பாஜக அரசு முழு முயற்சி : தமிழிசை சௌந்தரராஜன்

இலங்கையில் 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக தலைமையிலான அரசு முழு முயற்சி செய்து வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், தமிழக மீனவர்களை மீட்க பாஜக அரசு அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அது தற்போது செயல்முறையில் இருப்பதால் துல்லியமான விவரங்களை அளிக்க முடியாமல் உள்ளது.தமிழக மீனவப் பிரதிநிதிகளுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நீண்ட நேரம் ஆலோசனை நடத்தி தமிழக மீனவர்களின் பிரச்னையைக் கேட்டறிந்தார்.

எனவே, தமிழக மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறினார்.

மேலும், தமிழக மீனவர்கள் விவகாரம் அரசியலாக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தருமபுரி மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழப்பு இயற்கையாக நிகழ்ந்ததாகக் கூற முடியாது என்றும், இதற்கு பொறுப்பேற்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் தனது பதவியில் இருந்து விலகி, இந்த நிகழ்வு குறித்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும் வகையில் விரைவில் தான் தருமபுரி செல்லவிருப்பதாகவும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply