விண்வெளியில் பறக்கும் ரஷியாவின் மர்ம விண்கலத்தால் அச்சம்
கடந்த மே மாதம் ரஷியா ராக்கெட் மூலம் விண்கலன் போன்ற மர்ம எந்திரத்தை விண்ணில் செலுத்தியது. ஆனால் அது குறித்து மர்மம் காத்து வந்தது. இந்த நிலையில் தற்போது அது விண்ணில் பறப்பதை சில நாடுகளின் விண்வெளி நிறுவனங்கள் கண்டு பிடித்துள்ளன. தெற்கு பசிபிக் கடலின் மீது பறந்த போது இது கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் இது விண்ணில் சுற்றி வரும் விண்கலன்களை கண்காணிக்கவும், விண்வெளியில் உடைந்து மிதக்கும் விண்கலன் இடிபாடுகளை அகற்றவும் உதவும் என கருதப்பட்டது. தற்போது அது எதிரி நாட்டு விண்கலன்களை அழிப்பதற்காக அனுப்பப்பட்டதாக இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. விண்கலன் போன்ற மர்ம எந்திரத்துக்கு 2014–28 இ என பெயரிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply