இந்திய மீனவர்களின் விடுதலை இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்தும் :பிரபா கணேசன்
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதை வர வேற்பதாகத் தெரிவித்துள்ள பிரதியமைச்சர் பிரபா கணேசன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்நடவடிக்கை இந்தியாவுடனான உறவைப் பலப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது, இந்திய மீனவர்களின் விடுதலை சம்பந்தமாக ஜனாதிபதியின் கவனத்திற்கு நான் கொண்டு வந்திருந்தேன். ஜனாதிபதியும் இந்திய அரசாங்கத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அவர்களை விடுவிப் பதற்கு சம்மதம் தெரிவித்தார்.இருப்பினும் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்ததை மீளப்பெறுமாறும் தெரிவித்து அதனை இலங்கையிலுள்ள இந்திய தூதுவரிடம் தெரிவிக்குமாறும் எனக்கு பணிப்புரை விடுத்தார். ஜனாதிபதியின் நல்லெண்ணத் திற்கு நான் நன்றியைத் தெரிவித்திருந்தேன். அதேபோல் உடனடியாக இந்திய பிரதி தூதுவரிடம் ஜனாதிபதியின் செய்தியை தெரிவித்தேன். இருப்பினும் மேல்முறை யீட்டு வழக்கினை மீளப்பெறுவது சம்பந்தமாக இந்திய அரசாங்கம் காலதாமதத்தை ஏற்படுத்தியது.
இவை இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர பிரச்சினையாகும். அதில் நான் தலையிடவில்லை. இருப்பினும் இன்று வழக்கு மீளப்பெறப்பட்டு இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இது இந்திய வம்சாவளியை சேர்ந்தவன் என்ற முறையிலே எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.
உண்மையிலேயே இந்திய மீனவர்களின் விடுதலைக்கான காரணம் ஜனாதிபதி எடுத்த தீர்க்கத் தரிசனமான முடிவாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply