நாட்டுக்கு கேடு விளைவித்தவரே எரிக் சோல்ஹெய்ம் : கெஹலிய ரம்புக்வெல்ல
இந்த நாட்டுக்கு கேடு விளைவித்தவர்களில் ஒருவர் தான் சமாதானத் தூதுவராக இருந்த எரிக்சோல்ஹெய்ம் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார். சமாதான உடன்படிக்கை காலத்தில் புலிகளுக்கு எவ்வகையான உதவிகளை வழங்கினார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன என்றும் அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.இந்திய இராணுவத்தினரால் 360 பேராக மட்டுப்படுத்தப்பட்டிருந்த எல்.ரீ.ரீ.ஈ. யினர் ஐ. தே. க.வினரால் 5000 ஆயுதங்கள் மற்றும் நிதி வழங்கப்பட்டதாலேயே அவர்கள் ஒரே மாதத்தில் 6000 பேராக அதிகரித்தனர். இதே போன்றுதான் சமாதான உடன்படிக்கையின் போது புலிகளுக்கு தேவையான அனைத்தும் நோர்வே சமாதானத் தூதுவரால் அனுப்பிவைக்கப்பட்டன.
புலிகளின் விமான தயாரிப்புக்கான உதிரிப்பாகங்கள் அனுப்பப்பட்டன. இதே போன்று கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக அதிசக்திவாய்ந்த புலிகளுக்கான ஒலிபரப்பு சாதனங்கள் அனுப்பப்பட்டன. இது மட்டுமல்ல இன்னும் பல இவை எல்லாவற்றுக்குமான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. எரிக்சோல்ஹேய்ம் தான் இந்த நாட்டுக்கு கேடு விளைவித்தவர். அவர் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொய்யான தகவல்களை கூறுவதாக கூறிவருக்கிறார் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply