இலங்கை ஆளுங்கட்சிக்குள் பதவி மாற்றங்கள்

இலங்கையில் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார். மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்காக மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள நிலையிலேயே அவரது கட்சிப் பதவிக்கு அனுர பிரியதர்ஷன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.மைத்திரிபால சிறிசேனவுடன் விலகிச் சென்றுள்ள ராஜித சேனாரத்ன, துமிந்த திஸாநாயக்க, எம்.கே.டி.எஸ். குணவர்தன ஆகியோரையும் கட்சி அங்கத்துவங்களிலிருந்தும் அமைச்சுப் பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு நேற்றிரவு தீர்மானிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

இதனிடையே, நீக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் சுகாதார அமைச்சுப் பதவிக்கு துணை சுகாதார அமைச்சராக இருந்த லலித் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவ்வாறே, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன வகித்து வந்த மீன்பிடித்துறை அமைச்சுக்காக மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வகித்து வந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட பிரதான அமைப்பாளர் பதவிக்காக துணை அமைச்சர் சிறிபால கம்லத் நியமிக்கப் பட்டுள்ளதாகவும் அந்த கட்சி அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply