25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ராணுவத்துக்கு பீரங்கிகள் வாங்க ஒப்புதல்

போபர்ஸ் பீரங்கி ஊழல் தொடர்பான சர்ச்சைகள் நீடித்து வந்ததால், கடந்த 1986-ம் ஆண்டிலிருந்து இதுவரை ஒரு பீரங்கி கூட இந்திய ராணுவத்துக்கு வாங்கப்படவில்லை. இந்த காலகட்டங்களில் இருந்த மத்திய அரசுகள், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க தயங்கி வந்தன. தற்போது போபர்ஸ் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளதை தொடர்ந்து ராணுவத்துக்கு பீரங்கிகள் வாங்க மீண்டும் முடிவு செய்யப்பட்டது.

ராணுவ தளவாட கொள்முதல் குழு, ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் தலைமையில் நேற்று கூடியது. மனோகர் பாரிக்கர் பதவியேற்றபின் நடந்த இந்த முதல் கூட்டத்தில் ரூ.17 ஆயிரத்து 750 கோடி மதிப்பில் பீரங்கிகள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் 155 மி.மீ. அளவுள்ள 814 யூனிட் பீரங்கிகள் மற்றும் 52 துப்பாக்கிகள், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டப்படி வாங்கப்படும்.

மேலும் ரூ.7 ஆயிரத்து 160 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த விமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு கருவிகளும் வாங்குவதற்கு இந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

எனினும் விமானப்படையில் உள்ள 56 அவ்ரோ விமானங்களை மாற்றுவது உள்ளிட்ட மேலும் 2 திட்டங்கள் குறித்து முடிவெடுப்பது அடுத்த கூட்டத்துக்கு ஒத்திவைக்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply