ஹிலாரி-மேனன் சந்திப்பு ; இலங்கை விவகாரம் குறித்தும் பேச்சு
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் வாஷிங்டனில் சந்தித்துப் பேசினார். அப்போது பாகிஸ்தான், தீவிரவாதம், தலிபான்களின் பரவல், இலங்கை பிரச்சனை ஆகிய விஷயங்கள் குறித்து இருவரும் பேசினர். நான்கு நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்க சென்றுள்ளார் மேனன். அதிபர் ஒபாமா அரசு பதவியேற்ற பின் இந்திய மூத்த அதிகாரி ஒருவரை அமெரிக்க வெளியுறவுத் துறையினர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
இலங்கை விவகாரம் குறித்தும் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனுக்கும், இந்திய வெளிவிவகார செயலாளர் ஷிவ்சங்கர் மேனனுக்கும் இடையில் விசேட உரையாடல் நிகழ்துள்ளதாக தெரிகிறது.
இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க மற்றும் உயர் மட்ட அதிகாரிகளினால் நடத்தப்பட்ட முக்கிய பேச்சுவார்த்தையாக இது கருதப்படுகின்றது. மோதல்களுக்குள் சிக்கியுள்ள பொது மக்களை மீட்பதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து உதவிகளை வழங்க முடியும் என இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஷிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே வரும் ஏப்ரல் 2ம் தேதி லண்டனில் நடக்கும் ஜி-20 நாடுகள் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் பங்கேற்கவுள்ளார். அப்போது அதிபர் ஒபாமாவை அவர் சந்தித்துப் பேசுவார். இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள மன்மோகன் முதலில் இக் கூட்டத்தில் பங்கேற்பது சந்தேகமாக இருந்தது. ஆனால், இதில் பிரதமர் பங்கேற்பது நிச்சயம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply