போஸ்டர்கள், கட்அவுட், பெனர்கள் அகற்றும் பணிகளை கண்காணிக்க விசேட பொலிஸ் குழு
தேர்தல் பிரசாரங் களுக்காக முன்வை க்கப்படும் கட் அவுட்கள் மற்றும் பெனர்கள் சரிவர அகற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க பொலிஸ் திணைக் களம், பொலிஸ் கண்காணிப்பு குழுவொன்றை நியமித்துள்ளது. இந்த பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையில் ஆங்காங்கே போஸ்டர், கட்அவுட் அகற்றும் பணிகள் முறையாக இடம் பெறுகின்றனவா என்பதனை கண் காணிப்பரெனவும் பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர் அஜித் ரோஹண கூறினார்.
நாடு முழுவதும் போஸ்டர், கட்அவுட் அகற்றும் பணிக்காக 12 ஆயிரம் பொலி ஸாரும் அதற்கு மேலதி கமாக கூலித் தொழிலாளிகளும் சேவைக்கமர்த்தப்பட்டுள்ளன ரெனவும் அவர் கூறினார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று மாலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே பொலிஸ் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார். போஸ்டர் மற்றும் கட்அவுட்களை அகற்றுவதற்காக 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 08ம் திகதி வரை இதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
இதேவேளை, பொலிஸ் திணைக்களத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் முறைப்பாட்டு அலுவலகத்திற்கு நேற்றுவரையில் 49 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் அதனுடன் தொடர்புபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
தேர்தல் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட குற்றச் சாட்டிற்காக மாவத்தகம, உடுதும்பர, இப்பாகமுவ உள்ளிட்ட நான்கு பிரதேச சபைகளின் தலைவர்கள், நான்கு பிரதேச சபை உப தலைவர்கள் மற்றும் 10 பிரதேச சபை உறுப்பினர்கள் கைது செய்யப் பட்டிருப்பதுடன், தலைமறைவாகியிருக்கும் வந்துரம பிரதேச சபைத் தலைவரை பொலிஸார் தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக பயாகலை, மாதம்பை, கண்டி, கல்னேவ ஆகிய இடங்களைச் சேர்ந்த அறுவர் கைது செய்யப் பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply