தற்கொலை தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம்
மதஸ்தாபனங்களின் மீதும், மத நிகழ்வுகள் மீதும் தாக்குதல் நடத்துவதை புலிகள் இன்னும் கைவிட வில்லை என்பதையே இத்தாக்குதல் வெளிப்படுத்துகிறது என அக்குரஸ்ஸ தேசிய மீலாத் விழா தாக்குதல் குறித்து விடுத்துள்ள கண்டன அறிக்கையில் அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை, கண்டி தலதா மாளிகை தாக்குதலென புலிகளின் கொடூர வடிவம் இன்னும் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றது.
மூவின மக்களும் ஒன்று கலந்து கொண்டாட ஏற்பாடாகியிருந்த அக்குரஸ்ஸ தேசிய மீலாத் விழா நிகழ்வில் புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதல் மனித நேயமிக்க எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்.
தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன், காயமடைந்த அனைவரும் விரைவில் பூரண சுகம் பெறவும் பிரார்த்திக்கிறேன்.
அப்துல் காதர் எம்.பி.
அக்குரஸ்ஸ தேசிய மீலாத் நபி விழாவில் இடம் பெற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதோடு, இத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களு க்கும், காயமடைந்தோருக்கும் எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
மத வைபவங்களிலும், மத ஸ்தாபனங்களின் மீதும் தாக்குதல் நடத்தும் பயங்கரம் காத்தான்குடி பள்ளி வாசல் என்றும், தலதா மாளிகையென்றும் நடந்து இன்றுவரை தொடர்வது மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும்.
மனித நேயமிக்க எவருமே ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவமாக இத்தாக்குதலை கருதுவதோடு, சகல இன மக்களாலும் கண்டிக்கப்படக்கூடிய இத்தாக்குதலில் காயமடைந்தோர் பூரண சுகம்பெற பிரார்த்திக்கிறேன்.
உலமாக் கட்சி
அக்குறஸ்ஸ மீலாதுன் நபி விழா நிகழவில் இடம் பெற்ற தற்கொலை தாக்குதலை உலமாக் கட்சியும் வன்மையாகக் கண்டித்துள்ளது.
சாந்தியையும், சமாதானத்தையும் போதித்த முஹம்மது நபி (ஸல்) பிறந்த தின நிகழ்வில் இவ் வாறான தாக்குதல் இடம்பெற்றிருப்பது மிகவும் கவலை தரும் விடயமாகும்.
காத்தான்குடி பள்ளிக்குள் நுழைந்து நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்த பாசிச புலிகளின் மற்றுமொரு பாசிச தாக்குதலாகவே இதனை நாம் கருதுகிறோம்.
இத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு, காய முற்றோர் சுகம்பெற பிரார்த்திக்கிறோம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply